×

மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்..!!

சென்னை: மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சரத்பாபுவின் குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். முத்து, அண்ணாமலை, வேலைக்காரன் ஆகிய படங்களில் ரஜினியுடன் இணைந்து சரத்பாபு நடித்துள்ளார். சென்னை தியாகராய நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சரத்பாபு உடலுக்கு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அஞ்சலி செலுத்தினார். நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

The post மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்..!! appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,Saratbhabu ,saratbabu ,Saratbapu ,
× RELATED அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க ரஜினி மறுப்பு..!!