×

ரூ.2000 நோட்டுகளை பெட்ரோல் பங்குகளில் மாற்றுவதால் இன்னல் அதிகரிப்பு: பெட்ரோலிய டீலர்கள்..!

டெல்லி: 2000 ரூபாய் நோட்டுகளை பெட்ரோல் பங்குகளில் மாற்றுவது அதிகரித்துள்ளதால் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய பெட்ரோலிய டீலர்கள் சங்கம் ரிசர்வ் வங்கி உதவியை நாடியது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நிலவிய அசாதாரண சூழல் தற்போதும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 அல்லது 200 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு 2000 ரூபாயை கொடுக்கும் வாடிக்கையாளர்களால் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் விநியோகத்தை அதிகரிப்பதுடன் பெட்ரோல் பங்குக்கும் அவற்றை வழங்க வங்கிகளை அறிவுறுத்துமாறு ரிசர்வ் வங்கியிடம் வலியுறுத்தப்பட்டது. இதற்கு முன்பு 10% அளவே 2000 ரூபாய் நோட்டுகள் புழங்கிய இடத்தில் தற்போது 90% அளவுக்கு வந்து குவிவதாக கூறும் டீலர்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனையும் 40%ல் இருந்து 10% ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது விற்பனை அதிகரித்து நிலுவையில் இருந்த கடன் தொகையும் வந்து சேர்ந்ததால் வருமான வரி சோதனையால் அல்லல்படும் சூழல் தற்போதும் ஏற்படும் சூழல் நிலவுவதாக பெட்ரோலிய டீலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனால் எரிபொருளுக்காக வழங்கப்படும் அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளுக்கும் சில்லறை தர முடியாத நிலை உள்ளதால் வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

The post ரூ.2000 நோட்டுகளை பெட்ரோல் பங்குகளில் மாற்றுவதால் இன்னல் அதிகரிப்பு: பெட்ரோலிய டீலர்கள்..! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Indian Petroleum Dealers Association ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...