×

நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் ஜமாபந்தி நாளை துவக்கம்

நெல்லை, மே 23: நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் வருவாய் கணக்குகள் சரிபார்க்கும் பணி (ஜமாபந்தி) நாளை (24ம் தேதி) துவங்குகிறது. நெல்லை மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் எனப்படும் வருவாய் கணக்குகள் சரிபார்க்கும் பணி 8 தாலுகாக்களில் நாளை (24ம் தேதி) துவங்குகிறது. வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் குறுவட்டம் வாரியாக வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்படும் நாள் வருமாறு:
பாளையங்கோட்டை தாலுகாவில் கலெக்டர் கார்த்திகேயன் வருவாய் கணக்குகளை சரிபார்க்கிறார். நாளை (24ம் ேததி) மற்றும் 25ம் தேதி மேலப்பாட்டம் குறுவட்டம், 26 மற்றும் 30ம் தேதி முன்னீர்பள்ளம், மே 31ம் தேதி சிவந்திப்பட்டி, ஜூன் 1, 2, 6ம் தேதிகளில் பாளையங்கோட்டை குறுவட்டங்களில் கணக்குகள் சரிபார்க்கப்படுகிறது.

சேரன்மகாதேவி தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் வருவாய் கணக்குகளை சரிபார்க்கிறார். மேலச்செவல் குறுவட்டத்திற்கு 24, 25, 26ம் தேதிகளிலும், முக்கூடல் மே 30, 31ம் தேதிகளிலும், பாப்பாக்குடி மே 31ம் தேதியிலும், சேரன்மகாதேவி குறுவட்டத்திற்கு ஜூன் 1, 2ம் தேதிகளிலும் ஜமாபந்தி நடக்கிறது. திசையன்விளை தாலுகாவில் சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் வருவாய் கணக்குகள் சரிபார்க்கிறார். விஜயநாராயணம் குறுவட்டத்திற்கு மே 24, 25ம் தேதிகளிலும், திசையன்விளை குறுவட்டத்திற்கு 25, 26ம் தேதிகளிலும் வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்படுகிறது.

நாங்குநேரி தாலுகாவில் சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் கணக்குகளை சரிபார்க்கிறார். களக்காடு குறுவட்டத்திற்கு 24, 25ம் ேததிகளிலும், ஏர்வாடி 26, 30, 31ம் தேதிகளிலும், பூலம் குறுவட்டத்திற்கு மே 31, ஜூன் 1ம் தேதிகளிலும், மூலைக்கரைப்பட்டி ஜூன் 1, 2ம் ேததிகளிலும், நாங்குநேரி ஜூன் 2, 6, 7ம் தேதிகளிலும் வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்படுகிறது.
ராதாபுரம் தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் சுகன்யா வருவாய் கணக்குகளை சரிபார்க்கிறார். லெவிஞ்சிபுரம் குறுவட்டத்திற்கு மே 24ம் தேதி, சமூக ரெங்கபுரம் மே 24, 25ம் தேதிகளிலும், பழவூர் மே 25, 26ம் தேதிகளிலும், பணகுடி மே 26, 30ம் தேதிகளிலும் வள்ளியூர் மே 30ம் தேதியிலும், ராதாபுரம் மே 31ம் தேதி ஆகிய குறுவட்டங்களில் வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்படுகிறது.

மானூர் தாலுகாவில் நெல்லை ஆர்டிஓ சந்திரசேகர் வருவாய் கணக்குகளை சரிபார்க்கிறார். தாழையூத்து குறுவட்டத்திற்கு மே 24, 25ம் தேதிகளிலும், மானூர் மே 25, 26, 30ம் தேதிகளிலும், வன்னிக்கோனேந்தல் மே 30, 31ம் தேதிகளிலும் வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்படுகிறது. அம்பாசமுத்திரம் தாலுகாவில் ஆய்வுக்குழு அலுவலர் மூர்த்தி வருவாய் கணக்குகளை சரிபார்க்கிறார். சிங்கம்பட்டி குறுவட்டத்திற்கு மே 24, 25, 26ம் தேதிகளிலும், அம்பாசமுத்திரம் குறுவட்டத்திற்கு மே 26, 30, 31ம் தேதிகளிலும் வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்படுகிறது.

நெல்லை தாலுகாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண் வருவாய் கணக்குகளை சரி பார்க்கிறார் மதவக்குறிச்சி குறுவட்டத்திற்கு மே 24, 25ம் தேதிகளிலும், நாரணம்மாள்புரம் 25, 30, 31ம் தேதிகளிலும், நெல்லை குறுவட்டத்திற்கு மே 31, ஜூன் 1, 2, 6ம் தேதிகளிலும், கங்கைகொண்டான் குறுவட்டத்திற்கு ஜூன் 6, 7ம் தேதிகளிலும் வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்படுகிறது. வருவாய் தீர்வாயத்தின் போது பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை தங்களது கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நாளில் வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் அளித்து பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

The post நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் ஜமாபந்தி நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Jamabandhi ,Nellai district ,Nellai ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...