×

யூரியா தழைச்சத்து பயன்பாட்டில் 25 சதவீதம் அசோஸ்பைரில்லம் பயன்படுத்தலாம்: வேளாண் துறை அறிவுரை

 

சிவகாசி, மே 23: யூரியா தழைச்சத்து பயன்பாட்டில் 25 சதவீதம் அசோஸ்பைரில்லம் பயன்படுத்தலாமென விவசாயிகளுக்கு வேளாண்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். யூரியா தழைச்சத்து பயன்பாடு குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: தற்சமயம் சாகுபடி செய்துள்ள மக்காச்சோளம், நெல் மற்றும் பயறுவகை பயிர்களில் தழைச்சத்து பயன்பாட்டிற்காக விவசாயிகள் யூரியா உரத்தை மட்டும் நம்பி இருக்காமல் மொத்த உர பரிந்துரையில் 25 சதவீதம் தழைச்சத்தாக உயிர் உரங்களை பயன்படுத்தலாம். மக்காச்சோளம், நெல் மற்றும் சிறுதானிய பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம் என்ற தழைச்சத்து ஏக்கருக்கு 5ல் இருந்து 8 கிலோ வரை பயன்படுத்தலாம். கூடுதலாக பயன்படுத்துவதால் பயிர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. மேலும், மண்வள அட்டை பரிந்துரைப்படி தழைச்சத்து பரிந்துரையில் 25 சதவீதம் அசோஸ்பைரில்லம் பயன்படுத்தலாம்.

பயறுவகை பயிர்களுக்கு ரைசோபியம் மற்றும் எண்ணெய்வித்து பயிர்களுக்கு ரைசோபியம் (கடலை) என்ற உயிர் உரத்தையும் பயன்படுத்தலாம். உயிர் உரங்களை இடும்போது மண்ணில் ஈரம் இருப்பது நல்லது. எனவே, மழைப்பொழிவு ஏற்பட்ட மறுநாள் உயிர் உரங்களுடன் தொழு உரம் அல்லது திரவ உயிர்உரங்கள் கலந்து இடுவதன் மூலம் தழைச்சத்து பற்றாக்குறையினை போக்கலாம். திரவ உயிர் உரங்கள் மிகவும் எளிதில் பயிருக்கு கிடைக்கும் நிலையில் இருப்பதால் இனிவரும் காலங்களில் விவசாயிகள் யூரியா உரத்தையே நம்பி இருக்காமல், அதன் பயன்பாட்டில் 25 சதவீதம் உயிர்உரங்களை பயன்படுத்தலாம். சாகுபடி செலவு குறைவதுடன், மண்வளத்தை பெருக்குவதற்கு உயிர்உரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post யூரியா தழைச்சத்து பயன்பாட்டில் 25 சதவீதம் அசோஸ்பைரில்லம் பயன்படுத்தலாம்: வேளாண் துறை அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Department of Agriculture ,Sivakasi ,Agriculture Department ,Dinakaran ,
× RELATED நாட்டுப் பசுவில் நன்மைகள் அதிகம்: வேளாண்துறை தகவல்