×

பெரியகுளத்தில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் இந்திய கப்பல் படை அணி வெற்றி

பெரியகுளம், மே 23: பெரியகுளத்தில் நடைபெற்ற 62ம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் இந்திய கப்பல் படை அணி வெற்றி பெற்று சுழற்கோப்பையை வென்றது. தேனி மாவட்டம், பெரியகுளம் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 62ம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் 15ம் துவங்கி கடந்த ஏழு நாட்களாக நாக் அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெற்றது.

லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து நேற்று இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. சுழற்கோப்பைக்கான இறுதிப் போட்டியில் இந்திய கப்பல் படை லோனாவாலா அணிக்கும், கஸ்டம்ஸ் புனே அணிக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இந்திய கப்பல் படை லோனாவாலா அணி 92க்கு 86 என்ற புள்ளிகள் அடிப்படையில் கஷ்டம்ஸ் புனே அணியை வென்று சுழற் கோப்பையை வென்றது.

மேலும் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் இந்திய விமானப்படை டெல்லி அணியும், நான்காம் இடத்தை பேங்க் ஆப் பரோடா பெங்களூர் அணியும் பிடித்தது. இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற இந்திய கப்பல் படை லோனாவாலா அணிக்கு சுழற்கோப்பை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை வழங்கினர். விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் துணைத் தலைவர் அபுதாகிர், செயலாளர் சிதம்பர சூரிய வேலு, பொருளாளர் டாக்டர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். ஏராளமான விளையாட்டு ரசிகர்கள் விளையாட்டுப் போட்டிகளை கண்டு களித்தனர்.

The post பெரியகுளத்தில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் இந்திய கப்பல் படை அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Indian Navy ,Periyakulam ,62nd All-India basketball final ,Dinakaran ,
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள்