×

வாகனம் மோதி மான் உயிரிழப்பு

 

சிங்கம்புணரி, மே 23: சிங்கம்புணரி பகுதியில் அடிக்கடி புள்ளி மான்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர் வருகிறது. பிரான்மலை எஸ்.விமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் இறை தேடி கிராமங்களுக்கு வருகிறது. அவ்வாறு வரும் மான்கள் வாகனங்களில் அடிபட்டும் நாய்கள் கடித்தும் உயிரிழந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பட்டுகோயில் களம் பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு வயது மானை அப்பகுதி தெரு நாய்கள் விரட்டி கடித்ததில் உயிரிழந்தது. நேற்று முன்தினம் அணைக்கரைப்பட்டி அருகே வாகனம் மோதி ஆண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. பின்னர் எஸ்வி.மங்கலம் காப்புக்காடு பகுதியில் மான் புதைக்கப்பட்டது.

The post வாகனம் மோதி மான் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Singampunari ,Branmalai S. Vimangalam ,Dinakaran ,
× RELATED மின்தடை அறிவிப்பு