×

சாலைக் கிராமத்தில் விதிமீறிய பாருக்கு சீல் வைப்பு

 

இளையான்குடி, மே 23: இளையான்குடி அருகே சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட் அருகே கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது. அதன் அருகே விதிமீறி பகல் நேரத்தில் மது விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பாஸ்கரன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் விஏஒ சரவணன், எஸ்ஐ பிரேம்குமார் ஆகியோர் முன்னிலையில் பார்களை பூட்டி சீல் வைத்தனர். மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக தெற்கு வலசைக்காட்டை சேர்ந்த ராஜா(47) என்பவரை சாலைக்கிராம போலீசார் கைது செய்தனர்.

The post சாலைக் கிராமத்தில் விதிமீறிய பாருக்கு சீல் வைப்பு appeared first on Dinakaran.

Tags : Road ,Ilayayankudi ,Saaligramam ,Saaligram ,Dinakaran ,
× RELATED பழநி கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர்...