
- அறவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில்
- கும்பாபிஷேக வலயம்
- பெரம்பலூர்
- கம் பாபிஷேக மண்டல பூஜை
- அறவாச்சூர் மதுரகாளியம்மாள் கோயில்
- பெரம்பலூர் மாவட்டம்
- பெருவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக மண்டல நிறைவு விழா
பெரம்பலூர்,மே23:பெரம்பலூர் மாவட்டத்தின் பிரசி த்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம் மன் கோயிலில் கும் பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பக்திப் பரவசத் துடன் தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் சிறு வாச்சூரில் அமைந்துள்ளது அருள்மிகு மதுரகாளியம் மன் திருக்கோயில். சக்தி ஸ்தலங்களில் முதன்மை யானதாகவும், பெரம்பலூர் மாவட்டத்தின் பிரசித்திபெ ற்ற ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோயிலின் மகா கும் பாபிஷேக விழாவானது 21ஆண்டுகளுக்குப் பிற கு ஏப்.5ஆம்தேதி நடைபெற் றது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை விழா நடை பெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற் று(22ம்தேதி)மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற் றது. இதனையொட்டி நடை பெற்ற யாக வேள்வி பூஜை யில் மூலிகைப் பொருட்கள் செலுத்தப்பட்டு, பூர்ணா ஹுதியும் நடைபெற்றது. இதனையடுத்து மேளதாள முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் சுவாமிகளுக்கு புனிதநீர்ஊற்றப்பட்டு சிற ப்பு பூஜைகளுக்கு பிறகு மஹா தீபாரதனை நடைபெ ற்றது. இந்நிகழ்வில் திரளா ன பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். ஏற்பா டுகளை கோயில் செயல் அலுவலர் அசனாம்பிகை தலைமையில் ஊர்முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர்.
The post சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக மண்டல நிறைவு விழா appeared first on Dinakaran.