×

திண்டுக்கல் லீக் கால்பந்து போட்டி ஞானம் மெமோரியல் அணி வெற்றி

திண்டுக்கல், மே 23: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் லீக் கால்பந்து போட்டி புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. முதல் டிவிசன் போட்டியில் திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கால்பந்து அணி, புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணியை 2:1 என்ற கோல் கணக்கில் வென்றது. பி.எஸ்.என்.ஏ. கால்பந்து அணி, காரனேசன் கால்பந்து அணியை 3:0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது டிவிசனில் லயன் தெரு கால்பந்து அணி, சுந்தரம் மெமோரியல் கால்பந்து அணி மோதிய போட்டி 2:2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. புனித மைக்கேல் கால்பந்து அணி, எஸ்.பி.எம். கால்பந்து அணியை 6:0 என்ற கோல் கணக்கில் வென்றது.

மூன்றாம் டிவிசன் போட்டியில் வத்தலக்குண்டு ராயல் கால்பந்து அணி, திண்டுக்கல் எஜூகேர் கால்பந்து அணியை 2:0 என்ற கோல் கணக்கில் வென்றது. நான்காம் டிவிசன் போட்டியில் அரசன் கால்பந்து அணி அன்னை ஸ்போர்ட்ஸ் கால்பந்து அணியை 1:0 என்ற கோல் கணக்கில் வென்றது. திண்டுக்கல் தாஸ் கால்பந்து அணி, ஜி.எஸ். ஸ்போர்ட்ஸ் கால்பந்து அணியை 4:1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஞானம் மெமோரியல் கால்பந்து அணி, சீட்ஸ் கால்பந்து அணியை 7:1 என்ற கோல் கணக்கில் வென்றது. இத்தகவலை மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் லீக் கால்பந்து போட்டி ஞானம் மெமோரியல் அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Gnanam Memorial ,Dindigul League ,Dindigul ,District ,Football League ,St. Mary's High School Ground ,Dindigul League Football Tournament Gnanam ,Memorial ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் அருகே ரயில் மோதியதில் தொழிலாளி படுகாயம்