×

இந்தியாவில் 50 ஆண்டுகளில் 1.38 லட்சம் பேரின் உயிரைப் பறித்த இயற்கை பேரிடர்கள்: ஐநா அமைப்பு தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் மோசமான வானிலை, பருவநிலை மாற்றம் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் கடந்த 50 ஆண்டுகளில் 1.38 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஐநாவின் உலக வானிலை ஆய்வுத் துறை தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உலக வானிலை மாநாடு நேற்று தொடங்கியது. இதையொட்டி, ஐநாவின் உலக வானிலை ஆய்வுத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் வருமாறு:

* கடந்த 1970ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை கடந்த 50 ஆண்டு காலத்தில் உலகளவில் 11,778 இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். ரூ.344 லட்சம் கோடி பொருளாதார இழ ப்புகள் ஏற்பட்டுள்ளன.

* உலகளவில் பதிவான இறப்புகளில் 90 சதவீதம் வளரும் நாடுகளில் நிகழ்ந்தவை.

* இந்தியாவைப் பொறுத்த வரை, இந்த காலகட்டத்தில் 573 பேரழிவுகளை சந்தித்து, 1 லட்சத்து 38 ஆயிரத்து 377 உயிர்கள் பலியாகி உள்ளன.

* ஆசியாவில் அதிகபட்சமாக வங்கதேசத்தில் 281 பேரழிவுகளில் 5 லட்சத்து 20 ஆயிரத்து 758 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 50 ஆண்டில் உலகளவில் பதிவான பேரிடர் இறப்புகளில் 47 சதவீதம் ஆசியாவில் ஏற்பட்டுள்ளது.

* இயற்கை பேரிடர்களால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய மக்களாகவே உள்ளனர்.

* எனவே 2027ம் ஆண்டுக்குள், முன்கூட்டிய வானிலை எச்சரிக்கை சேவைகள் உலகின் அனைத்து நாடுகளையும் எட்டுவதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள், உயர்மட்ட ஆலோசனைகளை விரைவுபடுத்த வேண்டியது அவசியமாகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் 50 ஆண்டுகளில் 1.38 லட்சம் பேரின் உயிரைப் பறித்த இயற்கை பேரிடர்கள்: ஐநா அமைப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,UN ,New Delhi ,UN Organization ,Dinakaran ,
× RELATED அனைத்திலும் சந்தேகத்துக்குரிய...