×

இத்தாலி ஓபன் டென்னிஸ் மெத்வதேவ் சாம்பியன்

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ரஷ்ய வீரர் டாவில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனேவுடன் (20 வயது, 6வது ரேங்க்) மோதிய மெத்வதேவ் (27 வயது, 2வது ரேங்க்) 7-5, 7-5 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 42 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. களிமண் தரை மைதானங்களில் நடக்கும் தொடரில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர் வென்ற 6வது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து சாம்பியன் பட்டமாகும்.

The post இத்தாலி ஓபன் டென்னிஸ் மெத்வதேவ் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Italy Open Tennis ,Medvedev ,Rome ,Davil Medvedev ,Dinakaran ,
× RELATED உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு