×

கறுப்பு பணம் வைத்திருப்போருக்கு சிவப்பு கம்பளம்: ப.சிதம்பரம் விமர்சனம்

புதுடெல்லி: ரூ.2000 நோட்டுக்களை பதுக்கி வைத்திருப்போர் அதனை மாற்றிக்கொள்வதற்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில், ‘‘ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கு எந்த அடையாள அட்டை, ஆவணங்கள் மற்றும் சான்றும் தேவையில்லை என்று வங்கிகள் தெளிவுபடுத்தியுள்ளன. எனவே கறுப்பு பணத்தை வெளிக்கொணருவதற்கே ரூ.2000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்படுகிறது என்ற பாஜவின் கூற்று தகர்க்கப்படுகின்றது.

2016ம் ஆண்டு 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே சாதாரண மக்களிடம் அவை புழக்கத்தில் இல்லை. அப்படியென்றால் அவற்றை பயன்படுத்தியது யார்? இதற்கு பதில் உங்களுக்கு தெரியும். கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு இது உதவியது. தற்போது அவர்கள் அவற்றை மாற்றிக்கொள்வதற்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கறுப்பு பணம் வைத்திருப்போருக்கு சிவப்பு கம்பளம்: ப.சிதம்பரம் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union government ,P. Chidambaram ,Dinakaran ,
× RELATED நெஸ்லே குழந்தைகள் உணவில் அதிக...