×

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

புழல்: செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மைக்கேல் ஜாக்சன்(26). இவர், அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த 2 தினங்கள் முன்பு வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூருக்கு குடும்பத்துடன் சென்று விட்டு நேற்று மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்து 5 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.15 ஆயிரம் பணம் ஆகியவை திருடுபோயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மைக்கேல் ஜாக்சன் இதுகுறித்து செங்குன்றம் போலீசார் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Michael Jackson ,Tirthankaraiyampattu Ambedkar Street ,Senkunram ,Dinakaran ,
× RELATED பல கொலை வழக்குகளில் தலைமறைவு பிரபல ரவுடி அதிரடி கைது