×

1 முதல் 10ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை: தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழக தனியார் பள்ளிகள் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள உத்தரவு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டும் இல்லாமல் தனியார் பள்ளிகளிலும் கண்டிப்பாக தமிழ் வகுப்புகள் நடத்த வேண்டும். இதற்கென மதிப்பெண் சான்றிதழ் தனியாக வழங்கப்படும். தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டில் அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கண்டிப்பாக தமிழ் பாடம் நடத்த வேண்டும். 9, 10ம் வகுப்புகளில் தமிழ் பாடத்தை தேர்ந்தெடுத்தவர்கள் தேர்வு எழுத வேண்டும். அதைப்போன்று, தமிழ் பாடத்தை எடுக்காதவர்களும் கண்டிப்பாக தமிழ் மொழி தேர்வு எழுத வேண்டும் என்று கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்தின் படி தேர்வுகள் நடக்கும். எனினும் 10ம் வகுப்பு தனியார் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் தேர்வுக்கான சான்றிதழ்களை தமிழ்நாடு தேர்வுகள் இயக்ககம் தனிச்சான்றிதழாக வழங்கும். எனவே தனியார் பள்ளிகள் தமிழ் கற்பிக்கும் தகுதியுள்ள ஆசிரியர்களை தங்கள் பள்ளிகளில் நியமித்து அவர்கள் மூலம் மாணவர்களுக்கு தமிழ் பாடம் கற்பிக்கப்படுவதையும் தேர்வு நடத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். இவற்றை மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 1 முதல் 10 ம் வகுப்பு வரை தமிழ் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

The post 1 முதல் 10ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: பள்ளி கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : School Education Department ,chennai ,Tamil Nadu Private Schools ,
× RELATED பூதலூர் வட்டம் புதுக்குடியில் ரூ.50 கோடியில் கால்நடை தீவன தொழிற்சாலை