×

போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் அரசுப்பேருந்துகளில் பயணிகளிடம் ரூ.2,000 நோட்டு வாங்கப்படும்

சென்னை: அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் ரூ.2,000 நோட்டு வாங்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே 19ம் தேதி அறிவித்தது, ரூ.2,000 நோட்டுகள் வைத்திருப்போர் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துநர்களுக்கு அனைத்து அரசுப் போக்குவரத்து கழகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அரசுப் பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளை பெறுவதற்கு எந்த தடையும் இல்லை, பயணிகளிடம் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும், வெளிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அளிக்கும் ரூ.2,000 நோட்டுகள் வாங்கக்கூடாது என்று நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் அரசுப்பேருந்துகளில் பயணிகளிடம் ரூ.2,000 நோட்டு வாங்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Transport Department ,Chennai ,Tamil Nadu Transport Department ,
× RELATED நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள...