×

பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் ரூ.19.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடைகள்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

கூடுவாஞ்சேரி: பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் கிராம தன்னிறைவு திட்டத்தின் கீழ், ரூ.19 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் 2 புதிய ரேஷன் கடைகளை வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில், பெருமாட்டுநல்லூர், கன்னிவாக்கம், தர்காஸ் நகர், பாண்டூர், அண்ணா நகர், தங்கப்பாபுரம், ராஜாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தங்கப்பாபுரம் ராஜாஜி நகர் மற்றும் தர்காஸ் நகர் ஆகிய பகுதிகளில் புதிய ரேஷன் கடை கட்டித்தரக்கோரி அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து, கிராம தன்னிறைவு திட்டத்தின் கீழ், தங்கப்பாபுரம் ராஜாஜி நகரில் ரூ.13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டிலும், இதேபோல் தர்காஸ்நகர் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டிலும் 2 புதிய ரேஷன் கடைகள் கட்டி முடிக்கப்பட்டன. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், காட்டாங்கொளத்தூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சித்ராரவி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு, ராஜாஜி நகர் மற்றும் தர்காஸ் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 2 புதிய ரேஷன் கடைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். பின்னர், பெண்களுக்கு புடவை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில், முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் இளங்கோவன் என்ற கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் பகவதி, துணை தலைவர் பிரியா, வண்டலூர் வட்ட வழங்கல் அலுவலர் அப்துல்ராஷிக், கூட்டுறவு சார் பதிவாளர் தசரதன், சரக மேலாளர் பொன்னம்பலம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில், திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் பிரபு நன்றி கூறினார்.

The post பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் ரூ.19.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடைகள்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Perumatunallur ,Kooduwancheri ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...