×

செம்பூண்டி கிராமத்தில் துரியோதனன் படுகளம்

மதுராந்தகம்: திரவுபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்சியான துரியோதனன் படுகளம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே செம்பூண்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு அக்னி வசந்த விழா கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது, தினமும் மாலை மகாபாரதம் சொற்பொழிவு நடைபெற்றது, வில் வளைப்பு, சுபத்திரை திருமணம், ராஜசூய யாகம், திரவுபதி துகில், அர்ச்சுனன் தபசு, குறவஞ்சி, கிருஷ்ணன் தூது, அரவான் களப்பலி, கர்ணன் மோட்சம், பதினெட்டாம் போர் போன்ற நாடகங்கள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து, நேற்று திரவுபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் அருகே களிமண்ணால் 25 அடி துரியோதனன் சிலை செய்து வைத்து பஞ்சவர்ணம் பூசி நாடக நடிகர்கள் பீமன் – துரியோதனன் வேடமிட்டு மகாபாரதத்தில் போரிடும் போர்க்களக் காட்சிபோல தத்ரூபமாக நாடகம் நடித்துக்காட்டினர். பின்பு, திரவுபதியம்மன் கூந்தல் முடிதல், பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

The post செம்பூண்டி கிராமத்தில் துரியோதனன் படுகளம் appeared first on Dinakaran.

Tags : Chembundi Village Madurandakam ,Agni Spring Festival ,Thruvadiyamman ,Chengalpaddu District ,Madurandakam ,Sembundi ,
× RELATED சித்தாமூர் அருகே பாஞ்சாலி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்