×

புளியம்பாக்கத்தில் பராமரிப்பின்றி பல்லாங்குழியான சாலை: சீரமைக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்: புளியம்பாக்கத்தில் பல்லாங்குழியான நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத்- செங்கல்பட்டு சாலையின் இரு புறமும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி மக்கள் நாள்தோறும் வாலாஜாபாத் வந்துதான் இங்கிருந்து காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகர்புற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வாலாஜாபாத் – செங்கல்பட்டு வரையிலான நெடுஞ்சாலையில் புளியம்பாக்கம் பகுதி சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும், பல்லாங்குழியாகவும் வரிசையாக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், வாகன போக்குவரத்திற்கு லாக்கியற்ற சாலையாக மாறி உள்ளது. இதனால், இச்சாலையில் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகின்றன.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘வாலாஜாபாத்தில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் நெடுஞ்சாலையில் சாலையில், கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக நான்கு வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த நான்கு வழி சாலை வாலாஜாபாத்திற்குள் வராமல் வள்ளப்பாக்கம், வெள்ளேரியம்மன் கோயில் வழியாக காஞ்சிபுரம் சென்றடைகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வாலாஜாபாத்தில் இருந்து புளியம்பாக்கம் வரையிலான நெடுஞ்சாலை, பராமரிப்பு இன்றி சாலை முழுவதும் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகின்றது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சுழல் நிலவுகின்றன. இவை மட்டுமின்றி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்சுகளும் இந்த சாலையில் ஊர்ந்து செல்லும் அவலநிலை நாள்தோறும் நீடிக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், நெடுஞ்சாலை துறையினர் இப்பகுதியில் உள்ள பல்லாங்குழி போன்ற பள்ளங்களை உடனடியாக மூடி வாகன போக்குவரத்திற்கு சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி வாகன ஓட்டிகளும், கிராமமக்களும் வலியுறுத்துகின்றனர்.

The post புளியம்பாக்கத்தில் பராமரிப்பின்றி பல்லாங்குழியான சாலை: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Pallantuary Road ,Pleyambakkam ,Walajabad ,Pallanguluthas ,Pliyambakkam ,WALLAJABAT-CHANKLPATU Road ,Palla Road ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி...