×

10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான செய்முறை பயிற்சி தேர்வுக்கு இன்று முதல் பதிவு: தேர்வு துறை இயக்குனர் அறிவிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நேரடித் தனித் தேர்வர்கள், 2012ம் ஆண்டுக்கு முந்தைய பழைய பாடத்திட்ட மாணவ-மாணவியர் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர இன்று முதல் 26ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாட்டில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடக்க உள்ள 10ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நேரடித் தனித்தேர்வர்கள்( முதல் முறையாக அனைத்து பாடங்களையும் எழுதுவோர்), ஏற்கெனவே 2012க்கு முந்தைய பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முதல் முறையாக நேரடி தனித் தேர்வராக பத்தாம் வகுப்பு தேர்வை எழுத விரும்புவோர் மற்றும் 2012ம் ஆண்டுக்கு முன்பு பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பித்த பிறகே, எழுத்து தேர்வுக்கு தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் ரூ.125 ஐ பணமாக செலுத்தி, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்து கொள்ள வேண்டும். அறிவியல் செய்முறைக்கான விண்ணப்பப் படிவங்கள் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் 23 முதல் 26ம் தேி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் 26ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான செய்முறை பயிற்சி தேர்வுக்கு இன்று முதல் பதிவு: தேர்வு துறை இயக்குனர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…