×

பிஎம்டபிள்யூ எம் ஸ்போர்ட் புரோ

பிஎம்டபிள்யூ நிறுவனம், துவக்க நிலையிலான செடான் மாடலாக, 2 சீரிஸ் கிரான் கூபேயின் புதிய வேரியண்டாக எம் ஸ்போர்ட் புரோ என்ற காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார் ஏற்கெனவே சந்தையில் உள்ள 220ஐ எம் ஸ்போர்ட் மற்றும் 220டி எம் ஸ்போர்ட் ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக இருக்கும். ஹெட் அப் டிஸ்பிளே, சைகைக் கட்டுப்பாடுகள், மொத்தம் 205 வாட் வெளிப்படுத்தக் கூடிய 10 ஸ்பீக்கர்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்தக் காரில் உள்ள 2.0 லிட்டர் 4 சிலிண்டர் கொண்ட டர்போ பெட்ரோல் இன்ஜின், 7 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 189 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஷோரூம் விலையாக சுமார் ரூ.45.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post பிஎம்டபிள்யூ எம் ஸ்போர்ட் புரோ appeared first on Dinakaran.

Tags : BMW ,Dinakaran ,
× RELATED அழகுக்கு மெருகேற்றும் வளையல்கள்!