×

பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் அக்னி சட்டிகள் செய்யும் பணி தீவிரம்-தொழிலாளர் மண் எடுக்க அனுமதி வழங்க கோரிக்கை

கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் கோயில் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் அக்னி சட்டிகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தொழிலாளர் மண் எடுக்க அனுமதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சித்திரை, வைகாசி மாதங்களில் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளன. திருவிழாவின் போது பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவதற்காக அக்னி சட்டி எடுத்து வழிபடுவது வழக்கம்.

கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் உள்ள ரெத்தினம் தம்பதியினர் அக்னி சட்டி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறுகையில் சுற்று வட்டார பகுதிகளில் திருவிழா காலம் என்பதால் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட அக்னி சட்டிகள் தேவைப்படுகின்றன. அதற்கான பணிகளை மும்மூரமாக ஈடுபட்டு வருவதால் அக்னி சட்டிகள் செய்வதற்கு தங்களுக்கு தேவையான மண் எடுப்பதற்கு வெளியூர் பகுதியில் இருந்து எளிதில் எடுத்து வர மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், மாவட்டத்தில் மண்பாண்டகல் செய்யும் தொழிலாளர்களுக்கு தாங்கள் மண் எடுத்துச் செல்ல சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் வருவாய்த் துறையினரின் தடங்கல் இன்றி எடுத்து வருகின்றனர்.

ஆனால் நமது மாவட்டத்தில் மண்பாண்டங்கள் செய்வதற்கான மண் எடுத்து வருவதற்கு வருவாய்த்துறையினரின் தடங்கல் உள்ளதால் மண்பாண்டங்கள் செய்வதற்கு தேவையான மண் பாட்டங்கள் எடுத்து வருவதில் சிரமம் ஏற்படுகின்றது. மாவட்ட கலெக்டர் மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளர்களுக்கு சிறப்பு அனுமதி கொடுத்தால் எங்கள் போன்ற தொழிலாளர்களுக்கு பெரிதும் பயனுள்ள வகையில் இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் திருவிழா காலங்களால் பக்தர்களுக்கு தேவையான அக்னி சட்டிகள் செய்து கொடுக்கும் பணிகள் எளிதாக இருக்கும் எனக் கூறுகின்றனர். அக்னி சட்டி ஒன்று ரூ.150 வீதம் கொடுக்கப்படுகின்றது. இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த சில்லரை வியாபாரிகள் ,மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நேரடியாகவே தங்களிடமிருந்து வாங்கி செல்கின்றனர்.

The post பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் அக்னி சட்டிகள் செய்யும் பணி தீவிரம்-தொழிலாளர் மண் எடுக்க அனுமதி வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Agni Shittles ,Krishnayapuram ,Agni Shilts ,Lalabette ,Krishnarayapuram ,
× RELATED மாயனூர், லாலாப்பேட்டை, கொசூரில் இயங்கும் 3 வார சந்தைகள் குத்தகைக்கு ஏலம்