×

உப்பூரில் குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியில் பறவைகள் எச்சம் கலந்த குடிநீர் விநியோகம்-வைரல் வீடியோவால் பரபரப்பு

முத்துப்பேட்டை : உப்பூரில் குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியில் பறவை எச்சங்கள் கலந்த குடிநீர் விநியோகம் செய்யும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் ஊராட்சி கோபாலசமுத்திரம்.கிராமம். இராவுத்தர் கோயில் அருகே சுமார் 15 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி மூலம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குடிநீரும், உள்ளூர் போர்வெலிருந்து எடுக்கப்படும் குடிநீரும் கலந்து இராவுத்தர் கோயில் தெரு, அய்யனார் கோயில் தெரு, பள்ளிகூட தெரு ஆகிய பகுதியில் வசிக்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் இந்த குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை தினமும் செயல்படுத்தும் பணியிலும் பராமரிக்கும் பணியிலும் ஈடுபடும் நபர் முறையாக பராமரிப்பு செய்யாததால் குடிநீர் பம்பிங் செய்யும்போது குடிநீர் தொட்டியின் மேல்புறம் உள்ள மூடியை தாண்டி குடிநீர் மேல நிறைந்து வழிந்து கீழே ஊற்றிய பிறகே பம்பிங் செய்வதை பணியாளர் நிறுத்துகிறார். இதனால் குடிநீர் தொட்டி மேல் புறத்தில் காக்கை, புறா, கழுகு போன்ற பறவைகளின் எச்சங்கள் குடிநீரில் கரைந்து தொட்டியில் உள்ள அனைத்து குடிநீரிலும் கலந்து விடுகிறது.

பின்னர் பொதுமக்களுக்கு அந்த அசுத்தமான குடிநீர் போய் சேர்ந்தது. இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஊராட்சி தலைவர் அரவிந்த், இதை நேரில் பார்வையிட்டு இருக்கும் குடிநீரை வெளியேற்றி குடிநீர் தொட்டி முழுவதையும் சுத்தம் செய்ய உத்தரவிட்டார். இதனால் பணியாளர்கள் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தனர்.

The post உப்பூரில் குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியில் பறவைகள் எச்சம் கலந்த குடிநீர் விநியோகம்-வைரல் வீடியோவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Upur ,Muthupupet ,
× RELATED பணத்தை பங்கு போடுவதில் தகராறு: பாஜ...