×

கே.பி.அன்பழகன் மீது 10,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்: வருமானத்துக்கு அதிகமாக ரூ.45 கோடி சொத்து குவிப்பு

தருமபுரி: சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது 10,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக கே.பி.அன்பழகன் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாக கே.பி.அன்பழகன் ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. ஆட்சிமாற்றம் ஏற்பட்டு கடந்த 2021ம் ஆண்டு வருமானத்தை விட 53சதவீதம் அதாவது ரூ.35 கொடியே 79 லட்சம் ரூபாய் வருமானத்திற்கும் அதிகமாக இவரது பெயரிலும் இவரது மனைவி ரம்யா பேரிலும் சொத்துக்களை குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கு சொந்தமான இலுப்பூரில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட தமிழ்நாடு முழுவது 56 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் இன்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதில் கேபி அன்பழகன், மனைவி மல்லிகா, மகன் சசிமோகன் சந்திரமோகன், மருமகன் ரவிசங்கர், அக்கா மகன் சரவணன், அக்கா மகன் சரவணக்குமார், காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மாணிக்கம், பள்ளி நிர்வாகி தனபால், உள்ளிட்ட பதினோறு பேர் மீது வழக்கு பதிவு செய்துளாளது. சுமார் 10,000 பக்கங்கள் அளவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 58 இடங்களில் நடந்த சோதனை, விசாரணையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் ரூ.45 கோடி சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கே.பி.அன்பழகன் 11.32 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.45.20 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கே.பி.அன்பழகன் மீது 10,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்: வருமானத்துக்கு அதிகமாக ரூ.45 கோடி சொத்து குவிப்பு appeared first on Dinakaran.

Tags : KP Anpahagan ,Dharmapuri ,AIADMK ,minister ,Dinakaran ,
× RELATED பாமகவுக்கு கைகொடுக்காத தர்மபுரி...