×

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் கடத்தி வந்த வாலிபர் கைது

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலைய பகுதியில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்த 65 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அந்த வாலிபர் சங்கராபுரம் அருகே மரூர் கிராமத்தை சேர்ந்த அதிபுத்திரன் மகன் கோவிந்தசாமி (24) என தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தசாமியை கைது செய்த போலீசார், உளுந்தூர்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர். அவர் பையில் வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் கடத்தி வந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Uilandurbat bus station ,Ulundurbat ,Sub-Inspector ,Jabar ,Kallakkurichi district ,Ulundurbate ,Inundurbat Bus Station ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி சட்டசபையில் மக்கள்...