×

இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலையில் வெடிப்பு: சாலைகளில் அடர் சாம்பல், பாறை துகள்கள் படர்ந்ததால் மக்கள் சிரமம்..!!

இத்தாலி: இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு காரணமாக கட்டானியா நகரில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலையாக கருதப்படும் இத்தாலியில் உள்ள 3330 மீட்டர் உயரம் உள்ள மவுண்ட் எட்னா எரிமலையில் இருந்து லாவா குழம்பு வழிந்தோடுகிறது. எரிமலை வெடிப்பின் போது வெளிப்பட்ட கரும் சாம்பல் கட்டானியா விமான நிலைய ஓடு பாதை முழுவதும் சூழ்ந்து உள்ளது.

இதனால் பாதுகாப்பு காரணம் கருதி கட்டானியா நகரில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கட்டடங்கள் சாலைகளில் அடர் சாம்பல் மற்றும் பாறைகள் துகள்கள் படர்ந்துள்ளதால் பொதுமக்கள் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். இதே போன்று மத்திய மெக்சிகோவில் உள்ள போபோ கெட்பில் எரிமலை வெடிப்பு காரணமாக பியூபிலா நகரை அடர் சாம்பல் மூடியுள்ளதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர்.

The post இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலையில் வெடிப்பு: சாலைகளில் அடர் சாம்பல், பாறை துகள்கள் படர்ந்ததால் மக்கள் சிரமம்..!! appeared first on Dinakaran.

Tags : Italy ,Mount Edna volcano ,Catania ,Mount Etna volcano ,Europe ,Italy's ,
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன்: கார்லோஸ் அல்கராஸுடன் மெத்வதேவ் பலப்பரீட்சை