×

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி: ரசிகர்கள் ஆர்வம்..!

* சேப்பாக்கத்தில் முதல்முறையாக களமிறங்கும் குஜராத் அணி

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த தோல்வியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்தது. 14 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளைப் பெற்றிருந்த மும்பை அணி தற்போது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ஐபிஎல் டி20 தொடரின் 16வது சீசன் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், பிளே ஆப் சுற்றின் குவாலிபயர்-1 ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30க்கு தொடங்கி நடைபெற உள்ளது. அந்த போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் (18 புள்ளி) அணியுடன் 2வது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது.

நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ள எலிமினேட்டர் ஆட்டத்தில் 3வது இடம் பிடித்த லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடன் 4வது இடம் பிடித்த அணி பலப்பரீட்சை நடத்தும். இதைத் தொடர்ந்து, குவாலிபயர்-2 மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் மே 26, மே 28ல் நடைபெற உள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் இதுவரை குஜராத் அணி ஒரு போட்டி கூட விளையாடியதில்லை. ஹோம் கிரவுண்ட் சூழல், சென்னை அணிக்கு சாதகமாக அமையுமா? அல்லது, இதுவரை சி.எஸ்.கே அணியிடம் தோற்றதே இல்லை என்ற சாதனையை குஜராத் தக்க வைக்குமா? என்பதை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

The post குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி: ரசிகர்கள் ஆர்வம்..! appeared first on Dinakaran.

Tags : Chennai team ,Gujarat ,Cheppakam, ,Chennai ,IPL ,Bengaluru ,Dinakaran ,
× RELATED நோ ஹெல்மெட்… நோ அபராதம் ‘தலை’ பெருசு...