×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதன் 5-ம் ஆண்டு நினைவு தினம்: கிராம மக்கள் கூடி உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதன் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடியில் காற்றுமாசு படுவதாக கூறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடைபெற்ற அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் எதிராக 100-வது நாளாக பேரணியாக சென்றனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 2 பெண்கள் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதில் கிராம மக்கள் கூடி உயிரிழந்தவர்களுக்கு மலர்வளையம் செலுத்தியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெண்கள், குழந்தைகள் உறுதிமொழி ஏற்றனர். இதனை முன்னிட்டு தூத்துக்குடி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் வெளி மாவட்ட போலீஸார் 1200 பேர் உள்ளிட்ட மொத்தம் 2,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் முன் அனுமதி பெற்று குமரெட்டியாபுரம், தோமையார் கோயில் தெரு, பூபாலராயர்புரம், முத்தையாபுரம், லயன்ஸ்டவுன், தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், சில்வர்புரம், பாத்திமாநகர் ஆகிய பகுதிகள் நடைபெறும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்றைய தினத்தில் மாவட்டத்தில் செயல்படும் 53 டாஸ்மாக் கடைகளும், பார்களையும் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பரவிய தகவலை தொடர்ந்து தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவை போலீஸார் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதன் 5-ம் ஆண்டு நினைவு தினம்: கிராம மக்கள் கூடி உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi firing ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...