×

உண்மை கண்டறியும் சோதனை வினேஷ் போகத், பஜ்ரங் பூனியாவுக்கு நடத்தப்பட்டால் அதே சோதனையை தாமும் செய்து கொள்ள தாயார்: பிரிஜ் பூஷண் டுவிட்

டெல்லி: உண்மை கண்டறியும் சோதனை வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியாவுக்கு நடத்தப்பட்டால் அதே சோதனையை தாமும் செய்து கொள்ள தாயார் என்று பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் கூறியுள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பாதகங்களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரிஜ் பூஷண் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் நார்கோ சோதனை அல்லது உண்மை கண்டறியும் சோதனைக்கு தாம் தயார் என குறிப்பிட்டுள்ளார். அதே சோதனை வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியாவுக்கு நடத்தப்பட்டால் தனக்கும் நடத்தலாம் என பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் உண்மை கண்டறியும் சோதனைக்கு வரும்படி பிரிஜ் பூஷண் சிங்கிற்கு மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் சவால் விடுத்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post உண்மை கண்டறியும் சோதனை வினேஷ் போகத், பஜ்ரங் பூனியாவுக்கு நடத்தப்பட்டால் அதே சோதனையை தாமும் செய்து கொள்ள தாயார்: பிரிஜ் பூஷண் டுவிட் appeared first on Dinakaran.

Tags : Vinesh Phogat ,Bajrang Punia ,Brij Bhushan Dwitt ,Delhi ,
× RELATED சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா,...