×

ரூ.2000 நோட்டு அறிமுகம் முட்டாள் தனமான நடவடிக்கை: ப.சிதம்பரம் விமர்சனம்

 

சென்னை: ரூ.2000 நோட்டு அறிமுகம் முட்டாள் தனமான நடவடிக்கை என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். உயர் மதிப்பு ரூபாய் நோட்டான ரூ.2000-ஐ திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் அல்லது நேரடியாக வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டு மாற்ற எந்த ஆவணமும் படிவமும் அடையாள அட்டையும் தேவையில்லை என வங்கிகள் அறிவித்துள்ளது. இந்நிலையில் கருப்புப்பணத்தை ரூ.2000 நோட்டாக பதுக்கி வைத்திருப்போருக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பதாக அறிவிப்பு உள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; ரூ.2000 நோட்டுகளை மாற்ற எந்த அடையாளமும், படிவங்களும், சான்றுகளும் தேவையில்லை என்று வங்கிகள் தெளிவுபடுத்தியுள்ளன. கறுப்புப் பணத்தை வெளிக்கொணரவே ரூ.2000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்ற பாஜகவின் வாதம் முறியடிக்கப்பட்டது. சாதாரண மக்களிடம் 2000 நோட்டுகள் இல்லை, 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அவர்கள் அதைத் தவிர்த்துவிட்டனர், தினசரி சில்லறை பரிமாற்றத்திற்கு அவை பயனற்றவை. அப்படியென்றால், 72000 நோட்டுகளை பயன்படுத்தியது யார் என்பது உங்களுக்கே தெரியும். கருப்பு பணத்தை பதுக்குவோருக்கு ரூ.2000 நோட்டு எளிதாக உதவியது.

ரூ.2000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தங்கள் நோட்டுகளை மாற்ற சிவப்பு கம்பள வரவேற்பு போல உள்ளது. கறுப்புப் பணத்தை வேரறுக்கும் அரசாங்கத்தின் நோக்கம் இவ்வளவுதான். 2016ல் ரூ.2000 நோட்டு அறிமுகம் ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை, 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வாபஸ் பெறப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ரூ.2000 நோட்டு அறிமுகம் முட்டாள் தனமான நடவடிக்கை: ப.சிதம்பரம் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : P. Chidambaram ,Chennai ,Dinakaran ,
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...