×

60 கோடி ஆண்டுகளுக்கு முன் ராட்சத விண்கல் விழுந்த இடம் ராஜஸ்தான் ராம்கர் பள்ளம் சுற்றுலா தலமாகிறது: 57.22 கோடி நிதி ஒதுக்கீடு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானிலுள்ள ராம்கர் பள்ளம் 57.22 கோடி செலவில் சுற்றுலா தலமாக உருவாக்கப்பட்டு வருகிறது. பூமியின் மேற்பரப்பில் விண்கல் தாக்கியதால் ஏற்படும் பள்ளங்களை ராம்கர் பள்ளங்கள் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். மகாராஷ்டிராவில் உள்ள சந்திர பள்ளம், மத்தியபிரதேசத்தில் உள்ள தாலா பள்ளம் ஆகியவை விண்கல் தாக்கிய ராம்கர் பள்ளங்களாக புவியியல் ஆய்வு மையம் அங்கீகரித்துள்ளது. தற்போது ராஜஸ்தானின் பாரன் மாவட்டம் தலைமையத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் மங்ரோல் தாலுக்காவில் உள்ள கிராமத்தில் விண்கல் தாக்கிய பள்ளம் ராஜஸ்தானின் முதல் மற்றும் இந்தியாவின் 3வது ராம்கர் பள்ளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

3.5 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட ராஜஸ்தான் ராம்கர் பள்ளத்தை 1869ம் ஆண்டு இந்திய புவிவியல் ஆய்வு மையம் கண்டுபிடித்தது. இது வனத்துறையால் காப்புப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடந்த நிதிநிலை அறிக்கையில், 60 கோடி ஆண்டுகளுக்கு முன் ராட்சத விண்கல் தாக்கியதால் உருவான ராம்கர் பள்ளத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்த 57.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வௌியிட்டார். இதையடுத்து அதனை சுற்றுலா தலமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளத்தை சுற்றி அழகுப்படுத்தி தோட்டங்கள் அமைத்தல், உணவு விடுதிகள், நுழைவு வாயில், இங்குள்ள கோயிலுக்கு செல்ல ரோப் கார், சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளின் ஒருங்கிணைப்புடன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராம்கர் பள்ளம் சுற்றுலா தலமாக மாற்றப்பட்ட பிறகு ஆண்டுதோறும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என ராஜஸ்தான் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சுற்றுலாத்துறை இயக்குநர் ராஷ்மி கூறும்போது, “புவியியல் சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலாத்துறை முன்னேறி வருகிறது. ராஜஸ்தான் ராம்கர் பள்ளம் அதில் முக்கியப் பகுதியாக அமையும்” என்றார்.

The post 60 கோடி ஆண்டுகளுக்கு முன் ராட்சத விண்கல் விழுந்த இடம் ராஜஸ்தான் ராம்கர் பள்ளம் சுற்றுலா தலமாகிறது: 57.22 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Ramgarh Crater ,Giant ,Shatter ,Jaipur ,Earth ,Giant Shore ,Rajasthan Ramgarh Crater ,Dinakaran ,
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...