×

பாஜ மீது மக்களுக்கு சலிப்பு அண்ணாமலை ஒப்புதல்: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என பேட்டி

கோவை: ‘பாஜ மீது மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை’ என அண்ணாமலை தெரிவித்து உள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் கள் விற்பனை செய்ய வேண்டும். கள்ளில் வருமானத்திற்கும் வழி உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் வருமானத்தை கள்ளால் எப்படி ஈட்டு கொடுக்க முடியும் என்பது வெள்ளை அறிக்கையில் உள்ளது. வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்த பிறகு விழுப்புரத்தில் மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் மக்கள் மத்தியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். விழுப்புரத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் மாநாடு நடைபெறும். 1985க்கு பிறகு கர்நாடகத்தில் ஆளுங்கட்சி திரும்ப ஆட்சிக்கு வந்ததில்லை.

அங்கு பாஜவின் மீது உள்ள சலிப்புத்தன்மையால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் இல்லை. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வைத்துள்ளவர்கள் பதுக்கி வைத்தவர்கள். இரண்டாயிரம் ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்குதான் பிரச்னை. டாஸ்மாக்கை, கோஆப் பரேட்டிவ் சொசைட்டியை, எலக்ட்ரிக்சிட்டி பில் கட்டும் இடங்களை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன். 2024ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. 2024ல் தொண்டனாக வேலை செய்வேன். 2024 தேர்தலில் டெல்லி அரசுக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. நிற்பவர்களை வெற்றி பெற வேலை செய்வேன். தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விருப்பமில்லை. இந்த மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பாஜ மீது மக்களுக்கு சலிப்பு அண்ணாமலை ஒப்புதல்: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என பேட்டி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP ,Coimbatore ,Baja ,2024 parliamentary elections ,
× RELATED கோவையில் தேர்தல் நடத்தை விதிகளை...