×

காசிமேட்டில் சிறியவகை மீன் விற்பனை அமோகம்

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று சிறியவகை மீன்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று அதிகாலை முதல் மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்குள் தற்போது செல்லவில்லை. பைபர் படகுகள் மட்டும் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றநிலையில், நேற்று காலை வானம் மேகமூட்டமாக இருந்தது. இதனால் கடலுக்குச் சென்ற பைபர் படகுகள் விரைவாக கரைக்குத் திரும்பின.

இருப்பினும் ஓரளவுக்கு சிறிய வகை மீன்கள் பிடித்து வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதனால் அந்த சிறிய வகை மீன்களை வாங்க அதிகாலை முதலே மக்கள் குவிந்தனர். விலையைப் பற்றி கவலைப்படாமல் மீன்களை வாங்கிச் சென்றனர். சங்கரா, இறால், நண்டு, அயிலா, ஷீலா உள்ளிட்ட மீன்களின் விலை உயர்வாகவே இருந்தது. தற்போது பெரிய மீன்கள் வரத்து இல்லை. இருந்தபோதும் சிறிய வகை மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

 

The post காசிமேட்டில் சிறியவகை மீன் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Kasimat ,CHENNAI ,Kasimedu Fishing Port ,Dinakaran ,
× RELATED தடைகாலம் என்பதால் வரத்து குறைந்தது...