×

‘மேட்ரிமோனியல்’ மூலம் விமான நிறுவன பெண்ணை ஏமாற்றிய இங்கிலாந்தில் படித்த எம்பிஏ பட்டதாரி கைது: கோவா ஓட்டலில் ஜாலியாக இருந்த போது சிக்கினார்

புதுடெல்லி: ‘மேட்ரிமோனியல்’ மூலம் விமான நிறுவன பெண்ணை ஏமாற்றிய இங்கிலாந்தில் படித்த எம்பிஏ பட்டதாரி, கோவா ஓட்டலில் ஜாலியாக இருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அரியானா மாநிலம் குர்கானை சேர்ந்த அன்ஷுல் ஜெயின் (39), இங்கிலாந்தில் எம்பிஏ படித்துவிட்டு இந்தியாவில் தொழில் செய்து வந்தார். அவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினர் அவரை கைவிட்டனர். அதனால் அவர் மக்களை ஏமாற்றி பிழைப்பதற்கான வழியை தேடினார். அந்த வகையில் தன்னை தொழிலதிபர் எனக்கூறி ‘மேட்ரிமோனியல்’ திருமண தகவல் தளத்தில் பதிவு செய்தார். தொடர்ந்து பல பெண்களிடம் ெதாடர்பு கொண்டு வந்தார். அந்த வகையில் விமான நிறுவனத்தில் பணியாற்றும் பெங்களூருவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அவரது வலையில் விழுந்தார். இருவரும் போனில் ஜாலியாக பேசிக் கொண்டனர். தொடர்ந்து அந்தப் பெண்ணை டெல்லிக்கு வருமாறு அன்ஷுல் ஜெயின் அழைப்பு விடுத்தார். அந்தப் பெண்ணும் டெல்லி சென்றார். அங்கு அந்தப் பெண்ணை வரவேற்ற அன்ஷுல் ஜெயின், அந்த பெண்ணை காரில் அழைத்துக் கொண்டு ஏரோசிட்டிக்கு சென்றார்.

குர்கானை நோக்கிச் சென்ற போது, காரின் டயரில் ஏதோ கோளாறு எனக்கூறினார். அந்தப் பெண்ணும் காரில் இருந்து கீழே இறங்கினார். திடீரென காரில் இருந்த அந்தப் பெண்ணின் சாமான்களுடன் அன்ஷுல் ஜெயின் தப்பிச் சென்றார். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், டெல்லி போலீசில் புகாரளித்தார். அவர்கள் வழக்கு பதிவு செய்து அன்ஷுல் ஜெயினை தேடி வந்தனர். இதுகுறித்து போலீஸ் துணை போலீஸ் கமிஷனர் (ஐஜிஐஏ) தேவேஷ் குமார் மஹ்லா கூறுகையில், ‘கோவாவின் பாஞ்சியில் பதுங்கியிருந்த அன்ஷுல் ஜெயினை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்க நகைகள், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் அன்ஷுல் ஜெயினின் காரில் இருந்தது. அந்த காருடன் அன்ஷுல் ஜெயின் தப்பிச் சென்றதால், போலீசில் புகார் அளித்தார்.

‘மேட்ரிமோனியல்’ திருமண தகவல் மைய தளத்தின் மூலம் தான் அன்ஷுல் ஜெயினிடம் தான் ஏமாற்றப்பட்டது குறித்தும் அந்த பெண் கூறினார். தங்க நகையுடன் தப்பிச் சென்ற அன்ஷுல் ஜெயின், அந்த நகையை கரோல் பாக்கில் உள்ள நகை வியாபாரிக்கு விற்றார். அந்தப் பணத்துடன் கோவாவிற்கு சென்று ஓட்டல்களில் தங்கி சூதாட்டம் ஆடினார். இதன் மூலம் பணத்தை இழந்தார். இதற்கு முன்பு இதேபோன்ற மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி அன்ஷுல் ஜெயிவை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்’ என்று அவர் கூறினார்.

The post ‘மேட்ரிமோனியல்’ மூலம் விமான நிறுவன பெண்ணை ஏமாற்றிய இங்கிலாந்தில் படித்த எம்பிஏ பட்டதாரி கைது: கோவா ஓட்டலில் ஜாலியாக இருந்த போது சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : England ,Goa cafe ,New Delhi ,
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்