×

நெல்லையில் அரசு பேருந்துகளில் 23-ம் தேதி முதல் டிக்கெட் வழங்கும்போது பயணிகளிடம் 2000 ரூபாய் நோட்டை வசூலிக்க வேண்டாம்: போக்குவரத்துக்கழகம்

நெல்லை: அரசு பேருந்துகளில் வருகின்ற 23-ம் தேதி முதல் டிக்கெட் வழங்கும்போது பயணிகளிடம் 2000 ரூபாய் நோட்டை வசூலிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர். அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர்களுக்கு வலியுறுத்தியுள்ளனர். வரும் 23 ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் பேருந்துகளில் வாங்கப்பட மாட்டாது என அரசு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி கருப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொல்லி 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி. அப்போது 2000 ரூபாய் நோட்டுகள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. அடுத்த சில ஆண்டுகளில் ரூ.2000 நோட்டுகள் புழக்கம் வெகுவாகக் குறைந்தது. தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் முந்தைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக்கப்பட்டன. மே 23 ஆம் தேதியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைக்கலாம் என்றும் தினமும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள செப்.30 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் அரசு பேருந்துகளில் வருகின்ற 23-ம் தேதி முதல் டிக்கெட் வழங்கும்போது பயணிகளிடம் 2000 ரூபாய் நோட்டை வசூலிக்க வேண்டாம் என்று நெல்லை போக்குவரத்துக்கழகம் ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர். 2000 ரூபாய் நோட்டுகள் பேருந்துகளில் வாங்கப்பட மாட்டாது என்று போக்குவரத்துகழகம் அறிவித்துள்ளது.

The post நெல்லையில் அரசு பேருந்துகளில் 23-ம் தேதி முதல் டிக்கெட் வழங்கும்போது பயணிகளிடம் 2000 ரூபாய் நோட்டை வசூலிக்க வேண்டாம்: போக்குவரத்துக்கழகம் appeared first on Dinakaran.

Tags : Nella ,Transport Transport ,Nelly ,
× RELATED நெல்லை -சென்னை இடையேயான ‘வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது