×

அமைச்சருக்கு தலைமை செயலர் கொலை மிரட்டல்?: டெல்லி ஆளுநர், போலீசில் புகார்

புதுடெல்லி: டெல்லி தலைமை செயலாளர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்து ஆளுநர், போலீசிலும் அவர் புகார் அளித்துள்ளார். ெடல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையிலான அதிகார மோதல் இருந்து வரும் நிலையில், டெல்லி அரசின் சேவைத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ், டெல்லி போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ‘டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார், எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 16ம் தேதி சிவில் சர்வீசஸ் வாரியத்தின் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

அன்றிரவு 9.30 மணி வரை தலைமைச் செயலாளருக்காகக் காத்திருந்தோம். அவருக்கு நாங்கள் காத்திருக்கும் செய்தியை வாட்ஸ்அப்பில் அனுப்பினோம். அவரும் தான் வருவதாக கூறினார். இரவு 9.30 மணியளவில் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்’ என்று தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கடிதம் எழுதியுள்ளார். அதில், தனக்கு தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post அமைச்சருக்கு தலைமை செயலர் கொலை மிரட்டல்?: டெல்லி ஆளுநர், போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Governor of ,Delhi ,New Delhi ,
× RELATED பெற்றோரை கவனிக்காதவர்களுக்கு 15%...