×

‘பாத்ரூமில் ஆபாச படம் பிடிப்பதில் கில்லாடி’ லாட்ஜில் இளம் பெண்ணிடம் அத்து மீறல்: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு

திருக்கழுக்குன்றம். மே. 21: லாஜில் இளம் பெண்ணிடம் அத்து மீறிய ஊழியரை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர் ராமு என்கிற ராமச்சந்திரன். இவர் அப்பகுதியில் பர்னிச்சர் மற்றும் அலங்கார கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஒரிஸா மாநிலத்தைச் சேர்ந்த சோனாலிகா (29) என்பவர் வேலை பார்த்துவந்தார். பின்னர் தற்போது சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் தற்போது வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் ராமு கடையில் சோனாலிகா ஏற்கெனவே வேலைப் பார்த்தபோது ராமுவிற்கும், சோனாலிகாவிற்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இருவரும் திருமணம் செய்துக் கொள்ள தங்களது வீட்டாரிடம் விருப்பத்தை தெரிவித்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.

இதனிடையே ராமு மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் ராமுவின் நண்பர்கள், பெரியவர்கள் குழந்தைகள் என சுமார் 20க்கும் மேற்பட்டோரும் மேலும் ராமுவிற்கு நிச்சயிக்கப்பட்ட சோனாலிகாவும் 3 கார்களில் நேற்றுமுன்தினம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிக்க கல்பாக்கம் அடுத்த பரமன்கேணி பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் 4 அறைகள் கொண்ட தனி வீடு எடுத்தனர். தங்களது லக்கேஜ்களை அறைகளில் வைத்து விட்டு வெளியில் சென்று அங்குள்ள கடற்கரை மற்றும் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டும், நீச்சல் குளத்தில் குளித்து விட்டும் பின்னர் இரவு 11 மணிக்கு மேல் அறைகளுக்கு வந்து தங்கினர். அப்போது ராமுவும், சோனாலிகாவும் மட்டும் அதே ரிசார்ட்டில் தனியறையில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் சோனாலிகாவுக்கு தன்னை யாரோ கட்டிப் பிடிப்பதுப் போன்று உணர்ந்துள்ளார். உடனே சோனாலிகா எழுந்துப் பார்த்த போது ராமு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் குழம்பிப் போன சோனாலிகா மீண்டும் தூங்க ஆரம்பித்த போது சிறுது நேரத்தில் மீண்டும் தன்னை கட்டிப் பிடிப்பதை உணர்ந்துள்ளார். சந்தேகமடைந்த சோனாலிகா அதிர்ச்சியடைந்து எழுந்தார்.ராமுவை எழுப்பி நடந்ததை கூறியுள்ளார். உடனே ராமு எழுந்து அறை மற்றும் பாத்ரூம்களில் தேடிப்பார்த்துப் பார்த்து விட்டு அவர்கள் படுத்திருந்த கட்டில் அடியில் குனிந்துப் பார்த்தபோது யாரோ ஒளிந்திருப்பது தெரிந்து இருவரும் கூச்சலிட்டும், செல்போனில் அழைத்ததாலும் பக்கத்து அறைகளில் தங்கியிருந்த உறவினர்கள் நண்பர்கள் ஓடி வந்தனர். பின்னர் கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்த நபரை பிடித்து உதைத்தனர்.

விசாரணையில் சீக்கினாங்குப்பத்தைச் சேர்ந்த சுபாஷ் (22) என்பதும், அந்த ரிசார்ட்டில் வேலைப் பார்ப்பவர் என்றும் தெரிய வந்தது. பின்னர் ராமு அவசர எண் 100 க்கு போன் செய்தார். ஆனால் போலீஸ் வருவதற்குள் அந்த ஊரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அந்த ரிசார்ட்டிக்கு வந்தனர். எங்கள் ஊர் ஆளை எப்படி அடித்தீர்கள் என்று ராமு ,சோனாலிகா மற்றும் உடனிருந்தவர்களை அடித்ததாகவும், அவர்கள் கொண்டு வந்த கார்களின் டயரில் காற்றை இறக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அங்கு வந்த கூவத்தூர் போலீசார் ராமு, சோனாலிகா உட்பட உடன் இருந்தவர்களை நீங்கள் காவல் நிலையம் வந்து புகார் கொடுங்கள் என்று அழைத்து வந்தனர். ராமு தரப்பினர் அடித்ததில் காயமடைந்த சுபாஷை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

இதனிடையே சுபாஷின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் சுபாஷை அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலையம் வந்து வலியுறுத்தினர். பின்னர் போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து அவர்களை அனுப்பி வைத்தனர். இது குறித்து சோனாலிகா தன்னை தாக்கி கற்பழிக்க முயற்சித்ததாக கூவத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் (இரு தரப்பினர் மீதும்) வழக்கு பதிவு செய்னர்.

விசாரணையில், ரிசார்ட்டின் பணியாளரான சுபாஷிடம் அறைக்கதவின் மற்றொரு சாவி இருப்பதால் உள்ளே இருப்பவர்கள் தாழிட்டு இருந்தாலும் , வெளியிலிருந்தும் திறந்து உள்ளே செல்ல முடியும், அவசரத்திற்கு பயன்படுத்துவதும் சாவியை யன்படுத்தி ராமுவும், சோனாலிகாவும் அறையில் இருந்த போது சுபாஷ் உள்ளே சென்று இதுப் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளான் என்றும் , அந்த அறையில் உள்ள பாத்ரூமில் ரகசிய இடத்தில் செல்போனை பொறுத்தி சோனாலிகா குளிப்பதையும் படம் பிடித்துள்ளான் என்றும் தெரிய வந்தது. அந்த செல்போனில் ஏற்கெனவே சுமார் 20 பெண்கள் குளிப்பது மற்றும் அறையில் நடந்த பலான விஷயங்கள் அடங்கிய வீடியோக்கள் பதிவாகியுள்ளது.
சுபாஷ், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அந்த ரிசார்ட்டில் வேலைப் பார்க்கிறான். இதுப் போன்று எத்தனை பேரை வீடியோ எடுத்துள்ளான்.

அந்த வீடியோவை வைத்து என்ன செய்தான் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விடுமுறை நாட்களை ஜாலியாக பொழுதை கழிக்க வந்த இடத்தில் இப்படியொரு சம்பவம் நடந்ததால் மிகுவும் மன வேதனை அடைந்னர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் ஊர் ஆளை எப்படி அடித்தீர்கள் என்று ராமு ,சோனாலிகா மற்றும் உடனிருந்தவர்களை அடித்ததாகவும், அவர்கள் கொண்டு வந்த கார்களின் டயரில் காற்றை இறக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

The post ‘பாத்ரூமில் ஆபாச படம் பிடிப்பதில் கில்லாடி’ லாட்ஜில் இளம் பெண்ணிடம் அத்து மீறல்: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Killadi ,Dharma ,Lajj ,Chennai K. K.K. ,
× RELATED அரசு பஸ்சில் பயணிகளிடம் நூதன பணமோசடி...