×

வடக்கு சிலுவைப்பட்டியில் 23ம்தேதி புனித அந்தோனியார் கெபி திறப்பு விழா

தூத்துக்குடி, மே 21:தூத்துக்குடி வடக்கு சிலுவைப்பட்டியில் புனித அந்தோனியார் கெபியை வரும் 23ம் தேதி அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைக்கிறார். தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு சிலுவைப்பட்டி, சுனாமி காலனியில் புனித அந்தோனியார் கெபி கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா வரும் 23ம் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.புனித அந்தோனியார் கெபியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தலைமை வகித்து திறந்து வைக்கிறார்.

எம்.ஆர்.குரூப்ஸ் சேர்மன் ஏ.மங்களராஜ் முன்னிலை வகிக்கிறார். தாளமுத்துநகர் மடுமாதா கோவில் பங்குதந்தை நெல்சன் ராஜ், உதவி பங்குதந்தை வின்சென்ட் ஆகியோர் பிரார்த்தனை செய்கின்றனர். மாலை 6 மணிக்கு ஆசீர் அன்னக்கிளி அறக்கட்டளை சார்பாக அசனவிருந்து நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து மீனவர் உரிமைக்கழக மாவட்ட தலைவர் ஆர்.கே.ரமேஷ், ஆர்.கே.பிரேம், அமல்ராஜ், ஜேசன், சதீஷ், சேசுராஜ், பாஸ்கர், ஜெயசீலன், அல்போன்ஸ், குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். கெபி திறப்புவிழாவில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று புனித அந்தோனியாரின் ஆசி பெற்று செல்லுமாறு தொழிலதிபர் மங்களராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post வடக்கு சிலுவைப்பட்டியில் 23ம்தேதி புனித அந்தோனியார் கெபி திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : 23rd ,St. Anthony ,Kebi ,Northern Cross ,Thoothukudi ,Minister ,Geethajeevan ,St. Anthony's Episcopal Church ,Tuticorin North Cross ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை..!!