×

11ம் வகுப்பு சேர்க்கை கிருஷ்ணசாமி பள்ளியில் கட்டண சலுகை அறிவிப்பு

கடலூர், மே 21: கடலூர் கிருஷணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கட்டண சலுகைகளை தாளாளர் ராஜேந்திரன் அறிவித்தார். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 257 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். இதில் 11 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 11 பேர். 400க்கு மேல் 98 மாணவர்களும், 450க்கு மேல் 22 மாணவர்களும், 475க்கு மேல் 5 மாணவர்களும் பெற்று சாதனை படைத்தனர். மாணவி நிஷாந்தி 500க்கு 483 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவி ராகநந்தினி 481 மற்றும் காருண்யா 579 மதிப்பெண்களை பெற்றனர். சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பள்ளியின் தாளாளர் ராஜேந்திரன் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

முதலிடம் பிடித்த மாணவிக்கு ரூபாய் 5000ம், அடுத்த இரண்டு இடங்களை பிடித்தோருக்கு முறையே ரூபாய் 3000 மற்றும் ரூபாய் 2000 வழங்கப்பட்டது. முதல்வர் முனைவர் நடராசன் விளக்க உரை நிகழ்த்தினார். பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் கிரிஸ்டினாபிளாரன்ஸ் வாழ்த்தி பேசினார். சாதனை மதிப்பெண் தந்த ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர். அப்போது பள்ளியின் தாளாளர் பேசுகையில், பல கட்டண சலுகைகள் அறிவித்தார். அதன்படி பத்தாம் வகுப்பில் 450 முதல் 469 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு 25 சதவிகிதமும், 470 முதல் 479 மதிப்பெண் பெற்றவர்களுக்கு 50 சதவிகிதமும், 480 முதல் 489 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு 75 சதவிகிதமும் கட்டண குறைப்பு வழங்கப்படும் என்றார். பத்தாம் வகுப்பில் 490 மற்றும் அதற்கு மேல் பெறும் மாணவருக்கு எந்த கல்விக் கட்டணமும் இன்றி பதினோராம் வகுப்பில் முழு சலுகையுடன் சேர்க்கை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

The post 11ம் வகுப்பு சேர்க்கை கிருஷ்ணசாமி பள்ளியில் கட்டண சலுகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnasamy School ,Cuddalore ,Mathari Rajendran ,Krishanasamy Memorial Metric Higher School ,Dinakaran ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!