×

10ம் வகுப்பு தேர்வில் சிகே மேல்நிலை பள்ளி சாதனை

கடலூர், மே 21: கடலூர் சிகே மேல்நிலை பள்ளியில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவிகள் ஸ்நேக சுப்ரியா, சவுந்தர்யா ஆகியோர் 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தை பெற்றார். அனிஸ் கண்ணா 485 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். சித்தார்த் 483 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். 2 பேர் கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண்ணும், சமூக அறிவியலில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 99 மதிப்பெண் 14 பேர் எடுத்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளி இயக்குனர் அமுதவள்ளி ரங்கநாதன், முதல்வர் திவ்யாமேரி, துணை முதல்வர் அனிதா, உயர்நிலை பள்ளி ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

The post 10ம் வகுப்பு தேர்வில் சிகே மேல்நிலை பள்ளி சாதனை appeared first on Dinakaran.

Tags : CK High School ,Cuddalore ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...