ஏலகிரி: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் கொரோனா போன்ற பல்வேறு காரணங்களால் 3 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறாமல் தடைபட்டிருந்தது. இந்த ஆண்டு ஏலகிரி மலையில் கோடை விழா வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி படகு இல்லம், இயற்கை பூங்கா, கோடை விழா மைதானம் ஆகிய இடங்களில் ஏற்பாடுகளை நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். பின்னர், திறந்தவெளி திரையரங்கை ஆய்வு செய்த பின் பழுதடைந்துள்ள அனைத்து கருவிகளையும், சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், இயற்கை பூங்காவில் குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
The post ஏலகிரி மலையில் 27, 28ல் கோடை விழா appeared first on Dinakaran.
