×

டிஎன்பிஎஸ்சியில் 93 பணியிடத்துக்கான தேர்வு: வேளாண்மை அலுவலர், உதவி இயக்குனர் பதவிக்கு 14,862 பேர் எழுதினர்: தமிழ்நாடு முழுவதும் 86 இடங்களில் நடந்தது

சென்னை: வேளாண்மை அலுவலர், உதவி இயக்குனர் பதவி உள்ளிட்ட பணியில் காலியாக உள்ள 93 பணி இடத்துக்கு தேர்வு நடந்தது. டிஎன்பிஎஸ்சி சார்பில் தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர்37 பணியிடங்கள், வேளாண்மை உதவி இயக்குனர்8 இடங்கள் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை பணிகளில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் 48 இடங்கள் என 93 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு, கடந்த ஜனவரி 12ம் தேதி வெளியானது. இதில் 14,862 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான கணினி வழித்தேர்வு மே 20, 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று தேர்வு தொடங்கியது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும்(பட்டப்படிப்பு தரம்), பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2ம் தாள் தேர்வு, கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு, பொது அறிவு(பட்டப்படிப்பு தரம்) தேர்வும் நடந்தது. இதற்காக 86 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இன்று 2வது நாள் தேர்வு நடக்கிறது.

The post டிஎன்பிஎஸ்சியில் 93 பணியிடத்துக்கான தேர்வு: வேளாண்மை அலுவலர், உதவி இயக்குனர் பதவிக்கு 14,862 பேர் எழுதினர்: தமிழ்நாடு முழுவதும் 86 இடங்களில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Tamil Nadu ,Chennai ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...