×

மாற்று சிந்தனை மரபை முன்னெடுத்தவர் அயோத்திதாசர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: அறிவுத்தளத்திலும் அரசியல் தளத்திலும் மிகப்பெரும் மாற்று சிந்தனை மரபை முன்னெடுத்த அயோத்திதாசரின் புகழ் வாழ்க என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
திராவிடன், தமிழன் ஆகிய சொற்களை அரசியல் தளத்தில் அடையாள சொற்களாக பயன்படுத்திய முன்னோடியும், தமிழ் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத ஆளுமையுமாகிய பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்தநாள். அந்நிய பொருட்களை புறக்கணிப்பதைவிட சாதி பெருமையை புறக்கணிப்பதுதான் முதன்மையானது என அவர் அன்றே முழங்கியது இன்றும் எண்ணி பார்க்கத்தக்கது.

பண்டிதரின் கருத்துகளை ஊன்றி படிப்போம், அவரது பல்துறை பங்களிப்புகளை நமது அரசு அமைத்து வரும் நினைவு மண்டபம் உள்ளிட்ட முயற்சிகளின் வழியே அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்வோம். அறிவுத்தளத்திலும் அரசியல் தளத்திலும் மிகப்பெரும் மாற்று சிந்தனை மரபை முன்னெடுத்த அயோத்திதாசரின் புகழ் வாழ்க. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மாற்று சிந்தனை மரபை முன்னெடுத்தவர் அயோத்திதாசர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Ayothasar ,CM G.K. ,Stalin ,Chennai ,Chief Minister of State ,Government ,G.K. Stalin ,CM G.K. Stalin ,
× RELATED தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி...