×

காங்கிரஸ் தலைமை அறிவிப்பு; கே.எஸ்.அழகிரி தலைமையில் ராஜிவ் நினைவிடத்தில் மரியாதை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ராஜிவ் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகத் துறை தலைவர் கோபண்ணா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் காந்தி நினைவிடத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்படும். அதை தொடர்ந்து மருத்துவ முகாம் நடக்கிறது. அதை தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்படும். இதை தொடர்ந்து, காலை காலை 10.30 மணி அளவில் சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

இதையடுத்து, காலை 11 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜிவ் காந்தியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளில், அனைத்து பிரிவு காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காங்கிரஸ் தலைமை அறிவிப்பு; கே.எஸ்.அழகிரி தலைமையில் ராஜிவ் நினைவிடத்தில் மரியாதை appeared first on Dinakaran.

Tags : K. S.S. ,Rajiv Memorial ,Analakiri ,Chennai ,Tamil Nadu ,Congress ,K.K. S.S. ,Rajiv ,K. S.S. Anakiri ,Dinakaran ,
× RELATED ராஜீவ் நினைவுதினம் அனுசரிப்பு