×

குஜராத் மோசடி நபர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

புதுடெல்லி: குஜராத்தை சேர்ந்தவர் கிரண் படேல். பலே மோசடி பேர்வழியான இவர் மீது குஜராத் மாநிலத்தில் 3 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவர் கடந்த மார்ச் மாதத்தில் ஜம்மு காஷ்மீருக்கு வந்து அங்குள்ள இரு மாவட்டங்களின் துணை ஆணையர்களை சந்தித்து பேசியுள்ளார். தான் பிரதமர் அலுவலகத்தின் உயர் அதிகாரி, உத்திகள் மற்றும் பிரசாரப் பிரிவின் கூடுதல் இயக்குநர் பொறுப்பில் இருப்பதாக கூறி நாடகமாடியுள்ளார். அரசு அதிகாரிகள் பலரை ஏமாற்றியதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மோசடி நபர் கிரண் மீது அமலாக்கத்துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தது. இந்நிலையில், கிரண் படேலுக்கு தொடர்புடைய 12 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.

The post குஜராத் மோசடி நபர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Enforcement ,Gujarat ,New Delhi ,Kiran Patel ,Pale ,Dinakaran ,
× RELATED முன்ஜாமீன் பெற்றவர் கைது குஜராத்...