×

சிக்கிமில் நிலச்சரிவு 500 சுற்றுலா பயணிகள் மீட்பு

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்துள்ளனர். இந்நிலையில் லாச்சென், லாச்சுங், சுங்தாங் உள்ளிட்ட பள்ளத்தாக்கு பகுதிகளில்கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டு சுற்றுலா சென்ற 500 பேர் வௌியேற வழியின்றி சிக்கி தவித்தனர்.இந்திய ராணுவத்தினர் விரைந்து சென்று அங்கு சிக்கி தவித்த 500 சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட 54 குழந்தைகள் உள்பட 216 ஆண், 113 பெண்கள் உள்பட 500 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

The post சிக்கிமில் நிலச்சரிவு 500 சுற்றுலா பயணிகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Sikkim ,Gangtok ,Lachen ,Lachung ,Chungtang ,
× RELATED சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்...