×

ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட விவகாரம் சமீர் வான்கடே சிபிஐ முன் ஆஜர்

மும்பை: போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் இயக்குநர் சமீர் வான்கடே, பாலிவுட் நடிகரிடம் ரூ.25கோடி லஞ்சம் கேட்டது தொடர்பான வழக்கில் நேற்று சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். சொகுசு கப்பலில் போதைப்பொருள் கடத்தியதாக இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 6 பேரை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநராக இருந்த சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் கைது செய்தனர். போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான போதிய ஆதாரம் இல்லை என விசாரணை குழு அறிக்கை அளித்ததை தொடர்ந்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க சமீர் வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று காலை நேரில் ஆஜரானார். அவரிடம் 5 மணிநேரம் விசாரணை நடந்தது. விசாரணைக்கு செல்வதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் சத்தியமேவ ஜெயதே என்று முழக்கமிட்டார்.

The post ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட விவகாரம் சமீர் வான்கடே சிபிஐ முன் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Sameer Wankaday ,CPI ,Mumbai ,Samir Wangdey ,Prevention of Drug Drug Division ,Bollywood ,Samir Vankaday ,CPI Ajar ,
× RELATED வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 15...