×

கேரளாவில் மனைவிகளை மாற்றும் கும்பல் மீது புகார் கொடுத்த பெண் கொலை கணவர் தற்கொலை முயற்சி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மணற்காடு பகுதியை சேர்ந்தவர் ஷினோ. அவரது மனைவி ஜூபி (26). ஷினோ சமூக வலைதளத்தில் ‘கப்பிள் மீட் அப் கேரளா’ என்ற குழுவில் உறுப்பினராக இருந்தார். இந்த குழுவில் உள்ளவர்கள் மனைவிகளை பிறருக்கு கைமாற்றி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த குரூப்பில் ஷினோ தனது மனைவி ஜூபியை வலுக்கட்டாயமாக இணைத்துள்ளார். ஜூபியை 9 பேர் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து ஜூபி கடந்த வருடம் ஜனவரி மாதம் கோட்டயம் கருகச்சால் போலீசில் புகார் அளித்தார். போலீசா ஷினோ உள்பட 6 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் ஜூபிக்கு ஷினோ அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதனால் ஜூபி தனது 2 குழந்தைகளுடன் மணற்காட்டில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வெளியே சென்றிருந்த நேரத்தில் ஜூபி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஷினோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலீசார் விசாரணைக்கு பயந்து ஷினோ அவருடைய வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரிடம் விசாரணை நடத்தினால் தான் ஜூபியை ஷினோ கொலை செய்தாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்தார்களா? என்ற உண்மை தெரியவரும்.

The post கேரளாவில் மனைவிகளை மாற்றும் கும்பல் மீது புகார் கொடுத்த பெண் கொலை கணவர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Shino ,Kottayam, Kerala ,Jubi ,
× RELATED கேரளாவில் தனது வீட்டில் திருடிய...