×

சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் 3 அதிகாரிகள் மீதான நடவடிக்கை ரத்து

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்று சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு ஜெயிலர் கிருஷ்ண குமார், சூப்பிரண்ட் அனிதா ஆகியோர் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி வினய் குமார் விசாரணை நடத்தி மேற்கூறிய அதிகாரிகள் மூன்று பேரும் குற்றவாளிகள் என்று அறிக்கை அளித்தார். இதையடுத்து மூன்று அதிகாரிகளையும் தண்டிக்க மாநில அரசு ஒப்புதல் வழங்கியது. இதை எதிர்த்து 3 அதிகாரிகளும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் வழங்கிய கர்நாடக மாநில அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

The post சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் 3 அதிகாரிகள் மீதான நடவடிக்கை ரத்து appeared first on Dinakaran.

Tags : Sasigala ,Bengaluru ,Princess ,DGB ,Sasikala ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்