×

முன்னாள் அதிபர் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழைய தடை

மாஸ்கோ: உக்ரைன் – ரஷ்ய போருக்கு மத்தியில் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை தொடர்ந்து விதித்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த மற்றொரு பொருளாதாரத் தடைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ரஷ்யா எடுத்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ரஷ்யாவில் உளவு பார்த்த வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் நிருபர் இவான் கெர்ஷ்கோவிச் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஐக்கிய நாடுகள் சபைக்குச் செல்லும் போது, ​​அவருடன் பயணித்த ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது. ரஷ்யாவிற்கு எதிராக 300க்கும் மேற்பட்ட தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

எனவே அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன் வெளியிட்ட அறிக்கையில், ‘காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தும் ரஷ்ய அதிபரின் பலத்தை குறைக்கும் வகையில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன’ என்றார்.

The post முன்னாள் அதிபர் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழைய தடை appeared first on Dinakaran.

Tags : Americans ,President Obama ,Russia ,Moscow ,Ukraine ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...