×

‘முத்தம்’ புகாரளித்த பெண் அதிகாரிக்கு அபராதம்: லண்டன் கோர்ட் தீர்ப்பு

லண்டன்: லண்டனில் காகிதமில்லா வணிக ஆலோசனை வழங்கும் ‘எஸ்டாக்ஸ்’ என்ற நிறுவனத்தில் அலுவலகத்தின் மேலாளராக அலெக்சாண்டர் கூலண்ட்ரிஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். அவருக்கு எதிராக அதே நிறுவனத்தில் பணியாற்றும் திட்ட மேலாளர் கரீனா காஸ்டரோவா என்பவர் பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தார். அதாவது அலுவலகத்தின் மேலாளர் அலெக்சாண்டர் கூலண்ட்ரிஸ், தன்னை பாலியல் ரீதியாக ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், தன்னை முத்தமிடுமாறும் கேட்டுக் கொண்டதாக, அலுவலகத்தின் அதிகாரபூர்வ மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மேலாளர் அலெக்சாண்டர் கூலண்ட்ரிஸுக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உள்ளூர் நீதிமன்றம், அந்தப் பெண் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது. மேலும், அதீத சிந்தனையால் அந்த பெண் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக கூறி, அந்த பெண்ணுக்கு 5,000 பவுண்ட் (ரூ.5.15 லட்சம்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. அந்த தொகையை ‘எஸ்டாக்ஸ்’ நிறுவனத்துக்கு செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post ‘முத்தம்’ புகாரளித்த பெண் அதிகாரிக்கு அபராதம்: லண்டன் கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : London Court ,London ,Alexander Coolandris ,Estax ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை